பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் வைப்பை தக்க வைத்துக் கொண்டது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.
அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக ரகானே, ஜோஸ் பட்லர் களம் இறங்கினர்.
ரகானே 9, அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 என வந்த வேகத்தில் பவுலியன் திரும்பினர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
சஞ்சு சாம்சன் 22 ஓட்டமும், ஸ்டூவர்ட் பின்னி 11 ஓட்டமும், பென் ஸ்டோக்ஸ் 14 ஓட்டமும் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் களம் இறங்கினர்.
ஆனால் ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியை மிரட்டியதால், கெய்ல் 1, அணியின் தலைவர் அஸ்வின் 0, கருண் நாயர் 3. அக்ஸ்தீப் நாத் 9, மனோஜ் திவாரி 7, அக்சர் பட்டேல் 9 என அடுத்தடுத்து வெளியேறினர்.
பஞ்சாப் அணியில் விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்த வண்ணம் இருந்தாலும் துவக்க வீரரான கே.எல். ராகுல் கடைசி வரை போராடி அரை சதம் அடித்து 70 பந்துக்கு 95 ஓட்டங்கள் என கடைசி வரை ஆட்டமிழக்கமாக இருந்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.