Friday, May 25, 2018

How Lanka

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபா லஞ்சம் - ஏன் தெரியுமா

அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபா லஞ்சமாக வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற அமர்வில் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசாங்கம் தேர்ந்தெடுத்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் இரண்டு லட்சம் ரூபா லஞ்சம் வழங்கி அரசாங்கத்துக்குச் சார்பாக கருத்துக்களை வெளியிட வைக்கின்றது.

நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் மூலமாக இந்தப் பணத்தொகை வழங்கப்படுகின்றது. அதன் காரணமாகவே ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் தொடர்பில் அதீத அக்கறையுடன் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதனை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை” என்றும் மஹிந்த யாப்பா தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.