கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் லின் 18 ஓட்டங்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் உடன் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மான் கில் சிறப்பாக ஆடி 17 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரி ஆர்ச்சர், பென் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் இறங்கினர்.
அணியின் ஸ்கோர் 47 ஆக இருக்கும்போது திரிபாதி 20 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ராகானேவுடன் இணைந்து நிதானமாக ஆடினார்.
ரகானே 46 ஓட்டங்களில் வெளியேறினார். அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பின்னி டக் அவுட்டானார்.
கிளாசனுடன் கிருஷ்ணப்பா கவுதம் இணைந்தார். 2 ஓவரில் 40 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.
கொல்கத்தா அணி சார்பில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது.