Monday, May 21, 2018

How Lanka

ராஜித முன்வைத்திருந்த வெளிநாட்டுப் பயண திட்டத்தை நிராகரித்த மைத்திரி

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமொன்றுக்கான அதிகாரிகள் பட்டியலை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது உலக சுகாதார அமைப்பின் 70வது பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் இலங்கையின் சார்பில் கலந்து கொள்ள முக்கிய சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த முக்கிய 20 அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை அமைச்சர் ராஜித சேனாரத்ன பரிந்துரை செய்து, ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.

எனினும் அவ்வாறான பெருந்தொகை எண்ணிக்கையிலானோர் வெளிநாட்டு அமர்வுகளுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று குறித்த பட்டியலை நிராகரித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதில் 14 பேர் மட்டும் ஜெனீவா செல்ல அனுமதியளித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் வருடாந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த 19ம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.