Monday, May 28, 2018

How Lanka

வற்றாப்பளை அம்மனைக் காணச் செல்லும் பக்தர்ககளை ஏமாற்றி - ஏற்றும் பேருந்து நடத்துநர்கள்

வற்றாப்பளை அம்மன் கோவிலை நோக்கி பெருமளவிலான பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளி மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் அம்பாளின் தரிசனத்தைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து பேருந்துகளின் செயற்பாடுகளினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
 

குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து செல்லும் பேருந்துகள், வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு பேருந்துகள் செல்வதாக சொல்லி ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும், முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்தில் அவர்களை இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

இதனையடுத்து கோவிலுக்குச் செல்வதற்கு முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து, கோவில் வரைக்கும் இன்னுமொரு பேருந்தில் ஐம்பது ரூபாய் கொடுத்து பயணம் செய்ய வேண்டியிருப்பதாக பொது மக்களும், பக்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.