ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்ததுடன் பெரிய அளவிலான பங்கு சரிவினையும் சந்தித்துள்ளது குறித்த தனியார் வங்கி.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செய்த பிரபல தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும் மற்றுமொரு ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள தனியார் வங்கியின் ஊழியர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வங்கியின் கிளிநொச்சி கிளையில், உயிரிழந்தவர்களுக்கு, ஊழியர்கள் அஞ்சலி செய்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவாகியிருந்தது.
அதனை அவதானித்த ஒரு குழு குறித்த வங்கிக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த இரண்டு ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இடை நிறுத்தப்பட்டவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றொருவர் அக்கரைப்பற்றையும் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பில் உள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகளால் கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவுகூருவது அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.
எனினும் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் போராளிகளை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என குறித்த வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வங்கியின் கிளிநொச்சி கிளையில் பணியாற்றும் ஏனைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வங்கியின் ஏனைய ஊழியர்களும் பணியில் இருந்து இடைநிறுத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தெற்கில் யுத்த வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் எமது வங்கி பங்குகொள்வது நிறுத்தப்பட்டிருந்தது, அதேவேளை இது தொடர்பான சுற்றறிக்கை சமூக ஊடகக் கொள்கை என்பவற்றை வங்கி அறிமுகப்படுத்தியது.
அத்துடன், வங்கி சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. இதனைக்காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது, இது சம்பளத்துடன் கூடிய இடைநிறுத்தம், வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழிமுறையுடன்தான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சமூக ஊடகக் கொள்கைகளை மீறியதுதான் குற்றச்சாட்டு, எனவே தண்டனை மிகச் சிறியதாகதான் இருக்கும் என வங்கி வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன