Friday, May 25, 2018

How Lanka

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 20 மாவட்டங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையாலும், அடை மழையினாலும் இதுவரை 16 பேர் உயிரிழந்ததுடன், 127,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடை மழை, மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 55,759 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும், இராஜாங்கனை, தெதுருஓயா, தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.


இதேவேளை இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, காலி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான்கதவுகளும் இன்று அதிகாலை திறக்கப்பட்டன.