Sunday, June 3, 2018

How Lanka

விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்து அரசுடைமை


விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும் இதில் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரால் இந்த சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் புலிகளின் சொத்துக்களை தேடி வடக்கு மற்றும் கிழக்கில் அகழ்வுப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.