Sunday, June 3, 2018

How Lanka

சிலாப கடற்பரப்பில் பெருந்தொகை மீன்கள் - மீனவர்கள் மகிழ்ச்சி


சிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு வகை மீன்கள் பாரியளவு திடீரென சிக்கியுள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் பாரியளவு மீன்களை மீனவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

நேற்றையதினம் ஹெர்ரிங் என்ற ஒரு வகை கடல் மீன் அதிகளவு கிடைத்துள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய தொகை மீன்களை விற்க முடிந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் வகை ஒரு கிலோ கிராம் 200 - 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அளவு மீன் சிக்கியதில்லை எனவும், இதுவொரு அபூர்வ விடயம் எனவும் சிலாபம் மீனவர்கள் கூறியுள்ளனர்.