இலங்கை புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
கொழும்பு தேசிய பத்திரிகை ஒன்றின் ஊடாக அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தும் முதல் கட்டமாக ஹம்பாந்தோட்டை புகையிரத பாதை அமைக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனமென்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. புகையிரத பாதை அமைப்பதற்கான பணிகளை வெளிநாட்டு நிறுனமொன்றிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஹம்பாந்தோட்டை பெலியத்த கதிர்காமம் புகையிரத பாதையை அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் புகையிரத பாதையை நிர்மானிப்பதற்கான பணிகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.