ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2020ம் ஆண்டு இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் இந்த கூட்டணியே வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தற்போதைய அரசாங்கம் அதன் மிகுதி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது. இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கத சுதந்திர கட்சியின் 16 பேர் விலகியமை சரியான முடிவு என ஜனாதிபதி கருதுகின்றார்.
அத்துடன், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்கின்றமை தவறு எனவும் ஜனாதிபதி கருதுகின்றார் என்பதை தான் உணர்கின்றேன்.
இவ்வாறான நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம். மொத்தத்தில் இது ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.