Monday, June 4, 2018

How Lanka

மாத்தறை, பிட்டபத்தர பீரிஸ் தோட்ட பிரதேசத்தில் இருந்து சிக்கிய பாரிய முதலை முட்டைகள்

தென்னிலங்கை பகுதியில் பெருந்தொகை முதலை முட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாத்தறை, பிட்டபத்தர பீரிஸ் தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய அளவிலான முதலை முட்டைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியிலுள்ள ஏரிக்கு அருகில் உள்ள பலா மரம் ஒன்றை வெட்டச் சென்ற நபர் இந்த முதலை முட்டைகளை அவதானித்துள்ளார்.


விடயம் தொடர்பில் பிட்டபத்தர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மிரிஸ்ஸ வனவிங்கு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அதிகாரிகள் முதலை முட்டைக்கு அருகில் சென்ற போது முதலை ஒன்று ஏரியில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்தில் இருந்து 48 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 44 முட்டைகள் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முதலை முட்டை இருக்கும் இடத்திற்கு மக்கள் செல்வது ஆபத்து என வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.