500க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொலை செய்த கருணாவுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தது யார்? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பெருந்தொகையான பணத்தை கொடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது யார்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு சிறிய நடவடிக்கையை வைத்து நாடாளுமன்ற செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு அரசியல் தீர்வையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
500க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொலை செய்த கருணாவுக்கு அமைச்சுப் பதவி கொடுத்தது யார்? அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பெருந்தொகையான பணத்தை கொடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது யார்?
இவ்வாறான நபர்களே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருதுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக” பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.