மட்டக்களப்பு - திருகோணமலை வீதியின், கண்டலடியில் சீமெந்து ஏற்றி வந்த லொறியொன்று மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவியாளரின்றி தனியே லொறியைச் செலுத்தி வந்த சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கத்தால் லொறி கட்டுப்பாட்டை மீறி சென்று மரத்தில் மோதுண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், லொறி சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.