ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைதான கிளிநொச்சி, திருவையாறு பகுதியை சேர்ந்த நபர் விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,
திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் எனும் குறித்த நபர் நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் தற்போது வரையில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பில் மேலும் கைதுகள் தொடரலாம் என பொலிஸார் தரப்பிலிருந்து தகவல் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.