பாதாள உலகக் கும்பல்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நேரடியாக களத்தில் இறங்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், நாங்கள் பாதாள உலகக்கும்பல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தற்போதைக்கு திட்டம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் பல்வேறு பாதாள உலகக்குழுக்களுக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் அவற்றை ஒளித்து வைத்திருந்துவிட்டு இப்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது தொடர்பான விசாரணைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.