Saturday, October 27, 2018

How Lanka

பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கோத்தபாய....??

இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அனைத்தும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபா ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஐக்கிய மக்கள் முன்னணி, மஹிந்த அணியுடன் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளார்.

அதற்கமைய எவ்வித தவறும் செய்யாத முப்படையினர் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

கடந்த காலங்களில் செயலிழந்த நிலையில் அரசாங்க புலனாய்வு பிரிவு மீண்டும் இயங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை யாழ். குடாநாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மனித கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழிக்க கோத்தபாய உறுதி பூண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.