Saturday, October 27, 2018

How Lanka

மஹிந்தவை ஏன் பிரதமராக்கினேன் - மைத்திரி கருத்து

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக்கியமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட உரையாற்றியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கம் ஒன்றை அமைத்து ஒரு வருடம் செல்வதற்கு முன்னர் அது பொருத்தமற்ற திருமணம் செய்து கொண்டமை போன்று தனக்கு தோன்றியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளல், கலாச்சாரம் ரீதியில் உணர்ந்த பொருத்தமற்ற தன்மை மற்றும் முறி மோசடி உட்பட பல விடயங்கள் காரணமாக தான் புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான காரணம் தொடர்பில் இன்றைய தினம் மக்கள் முன்னிலையில் விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி இந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்தார்.

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும், அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரதமர் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.