Monday, December 17, 2018

How Lanka

நாடாளுமன்றில் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில்

நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுப்பட்ட அனைவரும் தற்போது அடையாளளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகிய காணொளிகளுக்கமைய குற்ற விசாரணை திணைக்களத்தினால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



அவர்களுக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல், மிளகாய் தூள் தாக்குதல், உச்ச நிலை இடமான நாடாளுமன்றத்தில் சொத்துக்களை சேதப்படுத்தல், பொது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் கருத்தாகியுள்ளது.

எனவே இது தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகள் இல்லை என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலான காலப்பகுதியில் நாட்டில் அமைதியின்மை நிலை காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் சிலவற்றின் போது கடும் மோதல் நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.