ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கென iOS இயங்குதளத்தினை உருவாக்கியுள்ளமை தெரிந்ததே.
இதன் புதிய பதிப்புக்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது 12.1.2 எனும் பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இப் பதிப்பானது முன்னைய பதிப்பினை காட்டிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பல தவறுகள் நீக்கப்பட்டும் உள்ளன.
தவிர புதிய வசதிகள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த புதிய வசதிகள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ் வீடியோவினை கீழே காணலாம்.
தற்போது பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் முழுமையான பதிப்பு அடுத்த வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.