எவ்வித மாற்றமுமின்றி துறைமுக ஊழியர்களுக்கு போனஸ்
எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள போனஸ் கொடுப்பனவில் எவ்வித மாற்றங்களும் செய்யாது அனைத்து ஊழியர்களிற்கும் முழுமையான தொகையை வழங்குவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வழிக்காட்டல்களுக்கமைய அமைச்சின் வருடாந்த செயற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கான போனஸ் கொடுப்பனவு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்கள் ஆகிய இரு தவணைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கடந்தாண்டில் (2015 ஒரு தவணையில்) ஒரு ஊழியருக்கு ரூபா 30,088 போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஊழியருக்கு ரூபா 25,943 போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டது.
இம்முறை டிசம்பர் மாதத்திற்கான போனஸ் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாதென இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட ரூபா 30,088 போனஸ் கொடுப்பனவு இவ்வாண்டும் டிசம்பர் மாதமும் வழங்கப்படுமென இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையானது தன்னுடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே வருடாந்த போனஸ் கொடுப்பணவு தொகையை தீர்மானிக்கின்றது. அதன் அடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் வருடாந்த செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் தற்போதைய காலப்பகுதி வரையிலான இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாடுகள் கலந்தாலோசிக்கப்பட்டன.
தற்சமயம் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை எட்டியுள்ளதாக இக்கலந்துரையாடலில் பங்குக்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வனைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதத்திற்கான போனஸ் கொடுப்பனவை 2015 ம் ஆண்டைப் போன்று வழங்குமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளிற்கு அறிவுரை வழங்கினார்.
‘திருகோணமலை துறைமுகம், கடந்தாண்டில் முதன்முறையாக இலாபமீட்டும் துறைமுகமாக மாற்றப்பட்டது. அதேபோன்று இம்முறை காலி துறைமுகத்தின் இலாபம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இவ்வனைத்துச் செயற்பாடுகளுடனும் கடந்த காலத்தில் நாம் முகங்கொடுக்க நேரிட்ட தொழிற்சார் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் தீர்வுகளை வழங்கியுள்ளோம்.
நாம் ஊழியர்களுக்கு தேவையான போதியளவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். எனவே கடந்த காலத்தில் ஒரு சில தொழிற்சங்க தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இந்த துறைமுகம் இழக்க நேரிட்ட பணம் மற்றும் துறைமுகத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட கழங்கம் தொடர்பாக இன்று ஊழியர்கள் நன்றாக விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
இன்று எங்கள் ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தங்கள் சேவையினை முன்னெடுக்கின்றார்கள். வேலைத் தளங்களில் மிகவும் அமைதியான முறையில் தங்கள் பணிகளை முன்னெடுக்கின்றார்கள். இதன் காரணமாக எங்களுடைய வருமானம் அதிகரித்துள்ளது.
இக்காரணியை கருத்திற்கொண்டு துறைமுக அதிகார சபையின் தலைவரும், அத்தியட்சகர்கள் குழுவும் கடந்தாண்டு வழங்கிய போனஸ் பணத்தை இவ்வாண்டும் வழங்குவதற்கு தீர்மானித்தோம்.
துறைமுக அதிகாரச் சபையின் பிரச்சினைகள் இதுவரையில் முடிவுக்கு வரவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெற்றுக்கொண்ட கடனை கொழும்பு துறைமுகமே திருப்பி செலுத்த நேரிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக இக்கருவிகளுக்காக எவ்வித புதிய முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய கருவிகளை கொள்வனவுச் செய்யவுமில்லை.
எங்களது ஊழியர்கள் மிகவும் பழமையான கருவிகளை உபயோகப்படுத்தி தங்களுடைய பணிகளை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கின்றார்கள். இவ்வனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டே கடந்தாண்டு வழங்கிய போனஸ் கொடுப்பனவை இவ்வாண்டும் வழங்குவதற்கு நாங்கள் தீர்மாணித்துள்ளோமென..’அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, பிரதித் தலைவர் கலாநிதி பிரசன்ன பெரேரா, முகாமைத்துவ அத்தியட்சகர் சரத் குமார பிரேமசந்திர ஆகியோர் கலந்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது