யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஐவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் காணாமல் போயிருந்த மாணவனும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முதலாம் இணைப்பு யாழ். மண்டைதீவு, சிறுதீவு கடற் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும்
காணாமல் போன ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும், இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டைதீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.