கொழும்பிலிருந்து நொச்சியாகம நோக்கி முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் 07 சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கொழும்பிற்கு சுற்றுலா சென்று மீள திரும்புகையில் நள்ளிரவு 12. 10 அளவில் முந்தல் பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முந்தல் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ளானது: 18 பேர் காயம்