கடந்த காலத்தில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வழக்கு நேற்று மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளளார். தொடர்ந்து சாட்சியமளித்த ஞானசார தேரர்,
யுத்தம் நடைபெற்றபோதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தான் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளுக்கு தனிப்பட்ட ரீதியில் தான் உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காகவே இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆதரவு அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்ப்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சில முக்கிய இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை பொலிஸார் கைது செய்ததாக ஞானசார தேரர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஞானசார தேரரின் சாட்சிகளைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் முன்றாம் திகதிக்கு கொழும்பு மேல்முறையிட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி ஞானசார தேரருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது