Sunday, October 8, 2017

How Lanka

மக்ஸ்வெலுக்கு என்னதான் தெரியும் அவுஸ்ரேலிய ரசிகர்கள் கடும் விசனம்


அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய – அவுஸ்திரேலி அணிகள் மோதிக் கொண்ட நேற்றைய முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் துடுப்பெடுத்தாடி வெற்றி பெற்றது.



குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் பிஞ்ச்வை தவிர வேறு எவரும் சிறப்பான துடுப்பெடுத்தாட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் ஏமாற்றத்தினையே அளித்தார்.

அவுஸ்திரேலியா- இந்தியாவிற்கு எதிராக மோதிய முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹாலின் பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து 4ஆவது மற்றும் 5ஆவது ஒரு நாள் போட்டிகளில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு தரப்பட்டது. பின்னர் நேற்றைய டி20 போட்டியில் இந்தியாவிற்கு எதிராக களமிங்கினார்.

இரு போட்டிகளில் விளையாடாது மீண்டும் களம் இறங்கிய மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என அவுஸ்திரேலிய ரசிகர்கள் நம்பிக்கை கொண்ட அதே சமயம், இந்தியாவிற்கு சவாலாக அமைவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

எனினும் இந்தப் போட்டியிலும் சஹாலின் பந்து வீச்சிலேயே மேக்ஸ்வெல் ஆட்டமிழந்து சென்றது அவுஸ்திரேலிய இரசிகர்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

இத்தோடு தொடர்ந்து 4 போட்டிகளிலிலும் சஹாலிடமே, மேக்ஸ்வெல் தன் விக்கெட்டை பறிகொடுத்ததால், பல்வேறு விதமான விமர்சனங்களில் அவர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.