பெற்றோர்களே எச்சரிக்கை சிறு பிள்ளைகளுக்கும் தலைக்கவசமின்றி பிள்ளைகளை ஏற்றி செல்லாதீர்கள்.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச்சென்ற 15 பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ நகரில் அமைந்துள்ள பாடசாலைகளில் இருந்து தமது பிள்ளைகளுக்கு தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்ற காரணத்தினாலேயே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் அதிகமானோர் தாய்மார்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோர்கள், தமது பாதுகாப்புக்காக மாத்திரம் தலைக்கவசம் அணிந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் செயற்பட்டமைக்காக இவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடுவதற்கான படிவம் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு பிள்ளைகளின் பாதுகாப்பை கவனத்தில் எடுக்காது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வாகனப் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.