Thursday, October 26, 2017

How Lanka

அரசாங்க அதிபர் இல்லாது இயங்கும் மட்டக்களப்பு மாவட்டம்


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கான வெற்றிடம் ஒரு மாதம் கடந்தும் இன்னும் நிரப்பப்படவில்லை எனவும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை மனித உரிமை கேந்திரம் மற்றும் கபே அமைப்புகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கான வெற்றிடம் ஒரு வருடகாலத்திற்கும் மேல் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.


இந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்குமாறு அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட பட்டியலுக்கு அமைய 19 பேர் தொலைபேசி மூலம் அவ்வப்போது கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
எனினும் அவர்களிடம் எவருக்கும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.