Tuesday, October 24, 2017

How Lanka

வடக்கின் அடுத்த முதலமைச்சராக நீதிபதி இளஞ்செழியன் வரவேண்டும் சிங்கள மக்கள் விருப்பம்

முழுமையான இலங்கைக்கு எடுத்துக்காட்டாகியுள்ள நீதிபதி வடக்கில் முதலமைச்சராகினால் முழு இலங்கையுடன் ஒரு தாய் வீடு போல் மாறிவிடும் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்து கோயில்களில் மிருங்களை பலியிடுவதற்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று தடை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோயில்கள் போன்ற பொது இடங்களில் 300 அல்லது 500 கோழி மற்றும் ஆடுகள் பலியிடுவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

300 ஆண்டுகளாக இந்த சம்பிரதாயத்தை நடத்தி செல்வதற்காக இறைச்சி கடை சட்டமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதி நேற்றைய தினம் சுட்டிக்காட்டினார்.

நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பினை வரவேற்கும் சிங்கள மக்கள் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்னிலங்கை மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சிங்களவர், “நீதிபதியின் இந்த தீர்ப்பினால் அவர் மீது மரியாதை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் இதனை நிறுத்திய நீதிபதி கடவுளுக்கு எங்களின் கோடான நன்றி. யாழில் நிறுத்தப்பட்ட போதிலும் தெற்கில் இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். தெற்கில் இவ்வாறான ஒரு நீதிபதி கடவுள் என்று உருவாகுவார்? என நபர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் போன்றவர்கள் நாட்டிற்கு தேவையானவர்கள். மிகசிறப்பான நடவடிக்கை ஐயா. தங்களை போன்ற ஒரு மனிதனை இந்த உலகிற்கு கொடுத்த பெற்றோர்கள் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் என மற்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

துணிவு கொண்ட மனிதரின் செயற்பாடு இதுவாகும். பயத்தில் இதனை தாங்கி கொள்ள முடியாதவர்களும் உள்ளனர். நீதிபதிக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும்.