Friday, November 24, 2017

How Lanka

தனது கரங்களில் 1000க்கும் மேற்பட்ட மாவீரர்களின் உடல்களை நல்லடக்கம் செய்த தியாகு

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 1000க்கும் மேற்பட்ட மாவீரர்களின் உடல்களை தனது கரங்களில் தாங்கி நல்லடக்கம் செய்துள்ளதாக தியாகு என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இம்முறை மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்காக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிறப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த துயிலும் இல்லத்தில் பணியாளராக கடமையாற்றிய முறிப்பு தியாகு என்பவர் கருத்து தெரிவிக்கும் போது,


இந்த மாவீரர் துயிலுமில்லத்தில் நான் கடமையாற்றிய காலப்பகுதியில் 1000 மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்களை எனது கரங்களில் தாங்கி நல்லடக்கம் செய்துள்ளேன்.

இதேவேளை 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 5000க்கு மேற்பட்ட கல்லறைகளும் 2000க்கு மேற்பட்ட நினைவுக்கட்களும் இங்கே நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதி யுத்தத்தின் போது இந்த கல்லறைகள் சேதமாக்கப்பட்டு அழிவடைந்துள்ளன.

மேலும் தற்பொழுது இங்கே தேசமாக காணப்படும் கல்லறை சிதரல்களை நாங்கள் ஒன்று சேர்க்கின்றோம்.


இந்த கல்லறை சிதரல்களை நான் தாங்கும்போது மாவீரர்களை தாங்கிய உணர்வுகள் வெளிப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்களுக்கு நல்வாழ்வை அமைப்பதற்காக தமது உயிர்களை அர்ப்பணித்தவர்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் உணர்வுகள் குறுதியோடும் நரம்பில் ஆடும் அனுபவமாகவே அமையும் என தான் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.