Thursday, November 23, 2017

How Lanka

நெடுந்தீவு வைத்தியசாலையின் நிலை - சுகாதார அமைச்சர் அதிர்சி


யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையின் பகுதிகளை பார்வையிட்ட வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை இன்றைய தினம்(23) திறந்து வைத்துள்ளார்.

இதன்போது, ஏனைய பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இடிந்து விழும் நிலையில் பெண்கள், குழந்தைகள் விடுதிகள், செயலிழந்த நிலையில் மகப்பேறு விடுதி மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் பிணவறை என்பன காணப்பட்டுள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதுடன், ஏனைய விடயங்களையும் பார்வையிட்டு பல்வேறு திட்டங்களையும் முன்வைத்துள்ளார்.

இதேவேளை, இவற்றை படிப்படியாக அகற்றி புதிய கட்டிடங்களாக மாற்றம் செய்ய தனது காலப்பகுதியில் நடவடிக்கை எடுப்பேன் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உறுதியளித்துள்ளார்.