யாழ்ப்பாணத்தை கலக்கிவரும் வாள் வெட்டுக்குழுவினரால் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. அடிக்கடி இரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் வெளியே வரும் இந்தக் குழுவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையான நிகழ்வாக இருந்தது.
இதேபோன்று இன்றைய தினமும் கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி தர்ம அடி கொடுத்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கோண்டாவில் பகுதியில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, இன்று இரவு வாள்கள் சகிதம் மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள் வெட்டுக் குழுவினர், தமது சாகச நிகழ்வுகளை காட்ட முற்பட்டுள்ளனர்.
எனினும் சுதாகரித்துக் கொண்ட பொதுமக்கள் வந்தவர்களை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். பொது மக்களும், இளைஞர்களும் சுதாகரித்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதை எதிர்பாராத வள்வெட்டுக் குழுவினர் சிதறி ஓடியுள்ளனர்.
இதன் காரணமாக குட்சட் பகுதியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கோப்பாய் பொலிஸிசிடம் ஒப்படைத்துள்ளனர் என தெரியவருகிறது.