Friday, December 22, 2017

How Lanka

இலங்கையின் பின்வரிசை ஆட்டக்காரர்களை மாற்ற வேண்டும் - இலங்கை அணி ரசிகர்கள் வேண்டுகோள்

இலங்கை அணியின் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களை மாற்ற வேண்டும் எனும் கருத்து சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு இருக்கிறது.

பின்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவரையும் நீக்கி விட்டு புதிய வீரர்களை நிர்வாகம் தெரிவு செய்ய வேண்டும் என இலங்கை அணி ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
சமீப காலமாக இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட் வீரர்கள் சிறப்பான ஆரம்பம் மற்றும் ஓட்ட விகித சராசரியினை பெற்று கொடுத்தாலும் பின் வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் இதுவரை 6க்கும் மேற்பட்ட தோல்விகளை பெற்றது இலங்கை அணி எனவே பின்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவரையும் நீக்கி விட்டு புதிய வீரர்களை நிர்வாகம் தெரிவு செய்ய வேண்டும் என இலங்கை அணி ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 2–வது டி20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி விளையாடியது.


இலங்கை அணியின் பந்துவீச்சை தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் நாலாபுறமும் சிதறடித்தனர்.

இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா அதிரடியாக அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சால் பிரிக்க முடியாத கூட்டணி ஜெட் வேகத்தில் செல்ல தொடங்கியது. ரோகித் சர்மா அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

12.4 வது ஓவரில் ரோகித் சர்மா 118 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில அதிவேகமாக சதம் அடித்தவர்கள் வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா.

லோகேஷ் ராகுலுடன், முன்னாள் தலைவர் டோனி களமிறங்கி விளையாடினார். இந்திய அணி 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களுடன் விளையாடியது. டோனி 12 ஓட்டங்களுடனும், லோகேஷ் ராகுல் 62 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

லோகேஷ் ராகுல் மற்றும் டோனி கூட்டணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, சதம் நோக்கி விளையாடிய லோகேஷ் 89 ஓட்டங்களில் அவுட் ஆனார்.


பின்னர் டோனியுடன் கைகோர்த்த ஹர்திக் பாண்டியா 10 ஓட்டங்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

19.4 வது ஓவரில் டோனியும் 28 ஓட்டங்களில் அவுட் ஆனார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்தது.


இதைத் தொடர்ந்து 261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

நிரோசன் டிக்வெல்லா 19 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் பெரெரா மற்றொரு துவக்க வீரரான உபுல் தரங்காவுடன் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்
இதனால் இலங்கை அணியின் ரன் விகிதம் ஓவருக்கு 10 விகிதத்தில் எகிறியது. இலங்கை அணியின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 13-ஓவருக்கு 140 ஓட்டங்கள் 1 விக்கெட் என்று இருந்ததால், இந்திய அணி வீரர்கள் சற்று பயந்தனர்.

இலங்கை அணியும் வலுவான நிலையில் சென்று கொண்டிருந்தால் வெற்றி பெற்று உலக சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த போது, இந்த கனவை ஓரே ஓவரில் குல்தீப் யாதவ் கெடுத்தார்.

அவர் வீசிய ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரெரா 37 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்த பந்திலே அதிரடி ஆட்டக்காரரும் அணியின் தலைவருமான திசரா பெரெரா ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேற, ஒரே ஓவரிலே இலங்கை வசம் இருந்த வெற்றி இந்திய அணி பக்கம் திரும்பியது.

அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 17.2 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்கள் எடுத்து 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி சார்பாக குசால் பெரேரா அதிகபட்சமாக 77 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் இந்தியாவின் சார்பாக சஹால் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.