Saturday, December 23, 2017

How Lanka

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று விபத்து


கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியதில் 44பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இரத்தினபுரி, பதுல்பான பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேருந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


தற்போது படுகாயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரின் நிலை கவலைக்கிடம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்களில் 41 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும், மூன்று பேர்கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்களில் சிறு குழந்தையொன்று உள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.