Monday, December 25, 2017

How Lanka

தொடர்சியான இலங்கை அணியின் தோல்வி - சில ஆலோசனைகளை சொன்னார் தல டோனி



இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டுவென்டி- 20 தொடரில் பங்கேற்றது.

இதில் இரண்டு போட்டிகளில் வென்றிருந்த இந்திய அணி 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தது.


இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3 வது கடைசி போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று தலையில் குல்லா அணிந்து கொண்டாடினர்.

இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்திய வீரர் டோனி, இலங்கை வீரர்களுக்கு சில ஐடியாக்களை கொடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

அதில், தனஞ்சய, உபுல் தரங்கா மற்றும் சமரவிக்ரம ஆகிய 3 பேரிடமும் டோனி பேசிக்கொண்டிருக்கிறார். பேட்டிங் நிலைப்பாடு மற்றும் சில ஷார்டுகளை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து டிப்ஸ் வழங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

டோனி விவரித்துக்கொண்டிருக்க, இந்த 3 வீரர்களும் அவரை கவனித்துக்கொண்டிருக்கின்றனர், மைதானத்தில் நடைபெற்ற இந்த உரையாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.