Thursday, January 4, 2018

How Lanka

ஐ.பி.எல் தொடரில் எந்தெந்த அணியில் யார் ... யார் - முழு விவரங்கள்


இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் தொடராக ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது 11-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ள ஐபிஎல் போட்டி, அணிகள் முன்னதாக விளையாடிய வீரர்கள் அதிகபட்சம் மூன்று பேரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் இன்று அணிகள் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி - 15 கோடி

சுரேஷ் ரெய்னா -11 கோடி

ஜடேஜா - 7 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்
கிறிஸ் மோரிஸ் - 7.1 கோடி

ரிஷப் பண்ட் - 8 கோடி

ஸ்ரேயாஸ் ஐயர் - 7 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்ஸர் படேல் - 6.75 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுனில் நரேன் - 8.5 கோடி

ஆண்ரே ரசல் - 7 கோடி

மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா - 15 கோடி

ஹர்திக் பாண்டியா - 11 கோடி

ஜஸ்பிரிட் பும்ரா - 7 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவன் ஸ்மித் - 12 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி - 17 கோடி

டிவில்லியர்ஸ் - 11 கோடி

சர்ஃபரஜ் கான் - 1.75 கோடி

சன் ரைசஸ் ஹைதராபாத்
டேவிட் வார்னர் - 12.5 கோடி

புவனேஸ்வர் குமார் - 8.5 கோடி


கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்ட பிரச்சனை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன.

2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது என்பதால் வீரர்களின் ஏலம் வருகிற 27-ஆம் திகதி மற்றும் 28-ஆம் திகதிகளில் நடக்கிறது.

இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததால், வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.