இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடர் தொடர்பில், இலங்கையின் வேகப்பந்து பயிற்சியாளராக, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான முதலாவது போட்டி, எதிர்வரும் புதன்கிழமை (26) காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இன்றையதினம் (21) இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியுடன் இந்திய அணி பயிற்சிப் போட்டியில் விளையாடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.