சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் இந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் சிலர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
அந்த நபர்களை குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அவர்களிடம் 200 டொலர்களை பெற்றுக் கொண்டு, அவர்களை விடுவித்துள்ளனர்.
பெரமுன கங்கானம்லாகே காமினி, அபேசிங்க ஆராச்சிகே தொன் சத்திஸ்சந்திர விஜேவர்ன, பலின்கொந்தகே சுகத் சமிந்த மதுரஜீவ ஆகிய மூன்று பேரும் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.