Monday, May 28, 2018

How Lanka

உயிர்களை பலியெடுக்கும் அமானுஷ்ய தீவு - என்வைன்டினெட்

இந்த உலகு கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றாலும், மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அமானுஷ்யங்களும் பிரம்மிக்க வைக்கும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாகத்தான் காணப்படுகின்றது.

உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு! காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும் வேற்றுக்கிரகவாசிகள் இப்படியெல்லாம் நீங்கள் அறிந்ததுண்டா?

இந்நிலையில் யாருமே வசிக்க முடியாத மர்மமான தீவு ஒன்று இப்புவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த தீவுக்குச் சென்ற எவரும் இதுவரையில் உயிருடன் திரும்பியதே இல்லை என்பதுதான் வியப்பிற்குரியது.

கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டித்தீவுகள் உள்ளன.

அவ்வாறு காணப்படும் குட்டித்தீவுகளில் ஒன்றுதான் என்வைன்டினெட் என்று அழைக்கப்படும் ஓர் சிறிய நிலப்பகுதியும், உயிர்கொல்லும் தேசமுமாகும்.

என்வைன்டினெட் என்றால் திரும்பி வராது என்று அர்த்தமாம், இந்த தீவுக்கு இப்படிப் பெயர் வந்தமைக்கான பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஷ்யமும் மர்மமும் நிறைந்தது.

1900ஆம் ஆண்டுகளில் என்வைன்டினெட் தீவில் பெருமளவிலான மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள், மீன் பிடிப்பதை பிரதான தொழிலாக கொண்ட அவர்கள், பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள்.

எனினும், வியாபாரத்திற்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் வசிக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு சென்று வருவதுதான்.

இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள்.
தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அன்றிலிருந்து, தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள், வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள், திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.

1934ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் என்வைன்டினெட் தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.

ஆர்வமான விவியன் இந்தத் தீவுக்கு என்னதான் ஆனது? என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார்.

மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று என்வைன்டினெட் தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.

பிறகு, ஹெலிகொப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் தெரிந்தது பல அதிர்ச்சிகரமான விடயங்கள், அங்கு மனிதர்கள் இருந்த தடயமே இல்லையாம்.

பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை என்ற தகவல்களே இதன்மூலம் வெளிவந்தன.

எனினும், என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை தூர நின்றே ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்!
Read More

Thursday, March 29, 2018

How Lanka

செவ்வாய் கிரகத்தில் கூட்டமாக நகரும் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? உயிரினங்கள் அங்கு வாழ இயலுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகின்றது.

இந்த ஆராய்ச்சிக்காக ‘Curiosity Rover' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்தது. இந்த விண்கலத்தில் Mastcam எனும் கமெரா, அங்குள்ள காட்சிகளை படம் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, Rover விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்பி வருகிறது.


இந்நிலையில், சமீபத்தில் இந்த விண்கலம் அனுப்பியுள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறுகையில், ‘இது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாகும்.

இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என நான் நம்புகிறேன். இந்த படத்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன்.

பூமியின் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளுடன் அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் குறைந்த Resolution கொண்டதாகும்.

இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகளை பார்க்க முடியும். ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள், நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Read More

Friday, March 23, 2018

How Lanka

தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது

தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தான் மிகப் பழமையானது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் ”மேக்ஸ் பிளான்க்” அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டன.

இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின் மொழியியலை அவர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.

தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிகள் குறித்தும், அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் பல்வேறு தரவுகளைச் சேகரித்தனர்.

அதன் அடிப்படையில், சில விடயங்களைக் கண்டறிந்து அதனை ஆய்வறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:

கிழக்கே வங்கதேசத்தில் இருந்து மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதியானது குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் முதன்மையானதும், பழமையானதுமான திராவிட மொழிக்குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது. ஏறத்தாழ 22 கோடி மக்கள் அம்மொழிகளை தற்போது பேசுகின்றனர். தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவில்தான் அவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ் தான். அதைத் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக உள்ளன. அம்மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை.

உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சம்ஸ்கிருதத்தைப் போல சிதைந்து போகாமல் அதன் காப்பியங்களும், கல்வெட்டுகளும் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ந்து காணக்கிடைக்கின்றன.

பூகோள அடிப்படையில் திராவிட மொழிகளின் தோற்றம் எங்கு என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை; அதேபோன்று, எந்தக் காலத்தில் அவை தோன்றின என்பதை அறுதியிட்டுக் கூறவும் இயலாது. அதேவேளையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சில சான்றுகளின்படி ஆய்வு செய்ததில், ஆரியர்கள் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது.

இந்த விடயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்தொற்றுமையும் உள்ளது. மேலும், சில தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது.

என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, March 8, 2018

How Lanka

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை

1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.

பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை தொடர்பாக பலர் அறிந்திருப்பது குறைவு.

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் புத்தானிகந்தா கோவில் உள்ளது .

இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

இதேவேளை, 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.

இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சினைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன. மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Read More

Friday, February 2, 2018

How Lanka

இராட்சத டைனோசர் தொடர்பில் விஞ்ஞானிகள் தகவல்

டைனோசர்கள் அதிக அளவில் காணப்பட்ட பிரதேசமாக ஆபிரிக்கா விளங்குகின்றது.

இது தவிர ஆசியா போன்ற நாடுகளிலும் பரந்து காணப்பட்டுள்ளன.

இதேபோன்று எகிப்திலுள்ள சஹாரா பாலைவனத்தில் லண்டன் நகரில் பயன்படுத்தப்படும் பஸ் அளவிலான இராட்சத டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Mansoura University Vertebrate Palaeontology (MUVP) அமைப்பின் ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த டைனோசர்கள் தரையில் வாழக்கூடிய Brachiosaurus மற்றும் Diplodocus இனங்களைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவை 80 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும் நீளமானது 8 தொடக்கம் 10 மீற்றர்கள் வரை இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Read More
How Lanka

Panoramic முறையில் செவ்வாய் கிரகம்


கடந்த 2011ம் ஆண்டில் செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பப்பட்ட கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் இன்றுவரை அக் கிரகத்தினை ஆராய்ச்சி செய்து வருவதுடன் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது.

இப்படியிருக்கையில் Panoramic எனப்படும் அகலப் படமாக்கல் முறையில் அற்புதமான படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

குறித்த படங்களை வீடியோ வடிவில் மாற்றி நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை 2011ம் ஆண்டில் குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போதிலும் 2012ம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 2,000 நாட்களுக்கு அதிகமாக அங்கு தரித்துள்ளது.

இவ் விண்கலத்தினை எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
How Lanka

iPhone 8 ஆர்டர் செய்தவருக்கு சோப்புக்கட்டி - காவல் நிலையத்தில் முறைப்பாடு

பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றிடம் iPhone 8 ஐ ஆர்டர் செய்த நபருக்கு சோப்புக் கட்டி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 26 வயதான பொறியியலாளர் தாப்ரெஜ் மெகபூப் என்பவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் 15-20% விலைக்கழிவில் 55,000 ரூபாவிற்கு iPhone8 ஐ ஆர்டர் செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 22 ஆம் திகதி ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

அதனை உற்சாகத்துடன் பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

iPhone8 அட்டைப் பெட்டியினுள் சலவை சோப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தாப்ரெஜ்.

இதனையடுத்து, அவர் மும்பை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மும்பை பொலிஸார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Read More

Saturday, January 20, 2018

How Lanka

தவறை சுட்டிக்காட்டி கூகிளிடம் பரிசு வாங்கிய பெண்


கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழையை கண்டறிந்த ஆராய்ச்சியாளருக்கு கூகுள் நிறுவனம் 112,500 டொலர்கள் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குவாங் கோங் என்பவர், தான் கண்டறிந்த பிழையை சமர்பித்தார்.

இவரது பிழையை உறுதி செய்த கூகுள் கோங்-க்கு 1,05,000 டொலர்களும், இத்துடன் குரோம் ரிவார்ட்ஸ் திட்டத்தில் கூடுதலாக 7500 டொலர்கள் சேர்த்து மொத்தம் 112,500 டொலர்கள் சன்மானம் வழங்கியுள்ளது.

கூகுள் வரலாற்றில் பாதுகாப்புக்கென இத்தகைய சன்மானம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

2017 டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டில் மட்டும் 42 பிழைகள் சரிசெய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டு இயங்குதள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு ரிவார்ட்ஸ் திட்டத்தில் பிழைகளை கண்டறியும் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு கூகுள் சார்பில் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது
Read More

Friday, January 19, 2018

How Lanka

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவுள்ள Blue Moon சந்திர கிரகணம்

2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும்.


அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என space.com தெரிவித்துள்ளது.

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 இல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037 இல் நிகழும். இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்களாகும்.

Blue Moon முழு சந்திர கிரகணம் கடைசியாக நிகழ்ந்தது மார்ச் 31, 1866 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Wednesday, January 3, 2018

How Lanka

30 ஆண்டுகளில் சாக்லேட் அழிந்து விடும் அபாயம்

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சாக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

கொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சாக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மழையின்மையால் கொக்கோ பயிரிடல் பெரியளவில் பாதிக்கப்படும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மரங்களைப் போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 இலட்சம் தொன் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படுகின்ற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துவிட்டன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இணைந்துகொள்ளும் அவல நிலை தோன்றியுள்ளது.
Read More

Tuesday, December 19, 2017

How Lanka

உலக விஞ்ஞானிகளையே குழம்ப வைத்த அதிசயம்

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.


பொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்ட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.


இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாவதும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது.

Read More

Wednesday, November 22, 2017

How Lanka

625,000 யூரோக்களுக்கு விற்பனையான நெப்போலியனின் தங்க இலை

பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடுப்பட்டுள்ளது.

மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன.

கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் அவை பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் கொடுக்கப்பட்டது.

அதை அவர் தனது மகள்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் ஒரு தங்க இலை பாரிஸில் உள்ள ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இதன்போது 625,000 யூரோக்களுக்கு (550,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் 1127,58,943 ரூபா.

எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 6 மடங்கு அதிகமான தொகைக்கு இந்த தங்க இலை ஏலத்தில் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் விடப்பட்ட பொருட்களில் நெப்போலியனின் மனைவி ராணி ஜோஸப்பினுக்கு சொந்தமான தங்க பூக்கள் அலங்காரத்துடன் கூடிய நகைப்பெட்டியும் அடங்கும்.
Read More

Thursday, November 16, 2017

How Lanka

450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை விசயம் இதுதான்


புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

‘சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடங்களிலேயே 450.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் இந்த ஓவியம் அதிகப் பணத்திற்கு விற்பனையான ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு 179.4 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட பிகாசோவின் ‘த வுமன் ஆஃப் அல்ஜேரிஸ்’ ஓவியத்தின் சாதனையை முறியடித்து இந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.

டா வின்சியின் ஓவியத்தில் இயேசு கையில் கிரிஸ்டல் பந்தை வைத்துள்ளார். மறு கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது. ஓவியத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஓவியம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
Read More

Monday, November 13, 2017

How Lanka

உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வாங்க நாங்களும் பறப்பம் வானில்


அயர்ன் மேன் படத்தில் வருவது போன்று உலகின் மிக வேகமான ஜெட் பெக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அயர்ன் மேன் படத்தில் வரும் கதாநாயகன் உடலில் மாட்டப்பட்ட ஜெட் பெக் மூலம் வானில் பறந்து சென்று மக்களை காப்பாற்றுவார், அது போன்று நிஜ வாழ்க்கையில் ஜெட் பேக்கை உருவாக்கி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வாகனங்களை சோதனை செய்து பார்க்கும் மூத்த பைலட்டுமான ரிச்சர்ட் பவுரிணிங் இந்த சாதனை படைத்துள்ளார்.

அவர் வடிவமைத்துள்ள ஆடையில் ஆறு எரிவாயு கலன்கள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் 22 கிலோ வரையிலான சக்தியை வெளிப்படுத்தி முன்னேறி செல்வதற்கு உதவுகிறது.


இது முழுவதும் மனிதனின் கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படும். ரிமோர்ட் மூலம் கட்டுபடுத்த முடியாது.

ரிச்சர்ட் தனது உடலின் மூலம் இதை கட்டுபடுத்தி வானில் பறக்கிறார்.

இந்த ஆடை உலகின் மிக வேகமான ஜெட் பெக் என்ற சாதனை பெற்றுள்ளது, இதன் மூலம் மணிக்கு 51.53 கி.மீ. வேகத்தில் பறக்கலாம். அவர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பறந்து சென்றார்.

அவரது ஜெட் பெக்கை சோதனை செய்து பார்த்த கின்னஸ் சாதனை பதிவாளர் பிரவின் படேல் அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.
Read More

Friday, October 20, 2017

How Lanka

ஒபாமா முதன் முதலில் காதலித்த பெண் யார் தெரியுமா


அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கல்லூரியில் படித்த காலத்தில் முதன்முறையாக அலெக்ஸாண்ட்ரா என்ற பெண்ணைக் காதலித்தார்.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் அவருக்கு பல கடிதங்களை ஒபாமா எழுதியுள்ளார்.

அவற்றில் 9 கடிதங்கள் மட்டும் காதல் கடிதங்கள் ஆகும். அதில் அலெக்ஸாண்ட்ராவை உருகி உருகி வர்ணித்திருக்கிறார்.

அந்தக் கடிதங்கள் மூலம் அவரின் தீவிர காதலை புரிந்துகொள்ள முடியும்.

குறித்த கடிதங்கள் 30-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டவை.

இவை அனைத்தும் அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை ஒபாமா தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்துவிட்டு வழங்கியிருக்கிறார்.

மேலும், இக்கடிதங்களில் தான் பட்ட பொருளாதாரக் கஷ்டங்கள், கறுப்பினராகப் பிறந்ததால் பட்ட துயரங்கள், அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள், என அனைத்தையும் எழுதியுள்ளார்.

ஒபாமாவின் கடிதங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுத பலர் ஆர்வமாக உள்ளனர்.

Read More

Friday, October 6, 2017

How Lanka

என்னையா நடக்குது இந்த உலகத்தில ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தையை பிரசவித்தனர்


துருக்கியில் உள்ள மருத்துவமனையில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய துருக்கியின், கோனியா பகுதியைச் சேர்ந்த பாத்திமா பிரின்சி (42), அவரது மகள் காதா பிரின்சி (21) ஆகிய இருவரும் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது உலகிலேயே இதுதான் முதன்முறை எனவும் மருத்துவத்துறையில் இதுவொரு அதிசயம் எனவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் பெயர் சூட்டியுள்ளார்.

தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தவர்கள் பாத்திமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் என்பது குறிப்பிடத்தக்கது
Read More

Wednesday, October 4, 2017

How Lanka

பிரேசிலில் பொலிஸாரின் கைப்பேசியில் சிக்கிய நிஜ வேற்றுகிரகவாசி


உலகின் முதல் நிஜ வேற்றுக்கிரகவாசி என பிரேசில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரேசில் பொலிசார் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை வேற்றுக்கிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

பிரேசிலின் பெர்குமெட்டர் பகுதியில் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பொலிசார் நள்ளிரவில் குறித்த உருவத்தைக் கண்டு, தங்களது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளனர்.

ஆனால், குறித்த புகைப்படம் புகழ்பெற்ற திரைப்படக்காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட புகைப்படம் எனவும் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வேற்றுக்கிரக உருவத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளன. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அச்சம் காரணமாக அந்த உருவத்தை நெருங்காமல் அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர்.

மேலும், அந்த உருவம் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
Read More

Wednesday, September 20, 2017

How Lanka

சீனாவில் முட்டையிடும் மலை

சீனாவில் உள்ள குன்று ஒன்றை ”முட்டையிடும் மலை” என மக்கள் அழைக்கின்றார்கள்.

சீனாவின் கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகக் கூறப்படுகிறது.

9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டசன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன.

குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாக சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள்.

இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடைய வேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள்.

பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

அவர்கள் அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் மக்கள் நம்புகின்றார்கள்.

கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.
Read More

Friday, September 15, 2017

How Lanka

அமெரிக்காவில் பறக்கும் அருங்காட்சியகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் பயன்படுத்திய எயார் ஃபோர்ஸ் வன் விமானமே அருங்காட்சியகமாக உருமாறியுள்ளது.

அமெரிக்காவின் ரோட்ஸ் தீவின் க்வோன்செட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பறக்கும் அருங்காட்சியகம், சிறுவர்களைக் கருத்திற்கொண்டே உருவாக்கப்பட்டதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பன்னிரண்டு வருட முயற்சியின் பின் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

“வருங்காலத் தலைவர்களாக உருவாகவிருக்கும் சிறுவர்கள், ஒரு தலைவரின் கடமைகள் என்ன, அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன என்பன குறித்து அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், அவர்கள் தமக்குள் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அதற்கு இந்த அருங்காட்சியகம் உதவும்” என்று இந்த அருங்காட்சியத்தின் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க ஜனாதிபதிகளின் பயணத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுவது எயார் ஃபோர்ஸ் வன் என்ற போயிங் 747-8 ரக விமானம். இதில், வேறெந்த விமானத்திலும் இல்லாத பல வசதிகள் உண்டு.

மூன்று மாடிகளில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவுகொண்ட இவ்விமானத்தில், ஜனாதிபதி, அவரது செயலாளர், உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என 76 பேரும், விமானச் சிப்பந்திகளாக 26 பேருமாக 100க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கலாம். அனைவருக்கும் பிரத்தியேக தங்கும் அறைகள் உண்டு.

இயற்கை அனர்த்தம் மற்றும் ஏனைய அனைத்து ஆபத்துக்களையும் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைகளை அடையாளம் காணும் ராடார்கள், மற்றைய ராடார்களில் இருந்து தப்பும் வசதி, இணையதளத் தாக்குதல்களைக் கண்டறியும் வசதி, நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி, மின்காந்த அலைகள் ஊடுருவ முடியாத அமைப்பு, பாதுகாப்பான தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்று வசதி, சத்திர சிகிச்சைகள் செய்யக்கூடிய வகையிலான மருத்துவ வசதிகள் உட்படப் பல வசதிகள் கொண்டது இந்த விமானம்.

தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள இந்த விமானம், எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்குக்குப் பறந்து செல்லவிருக்கிறது. அங்கு சில காலம் தங்கியிருந்தபின், வொஷிங்டனில் தரையிறங்கும். அதன்பின் நிரந்தரமாக வொஷிங்டனிலேயே பார்வையாளர்களுக்காக வைக்கப்படவுள்ளது.
Read More

Friday, September 8, 2017

How Lanka

மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் - கின்னஸ் சாதனை

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெறவுள்ளது.

""   என் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை நகங்களை வளர்ப்பதற்கே செலவிட்டிருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழியைப் பார்த்துதான் நகங்களை வளர்க்கும் ஆர்வம் வந்தது. ஒரு கட்டத்தில் நகங்களைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே என் முழு நேர வேலையாக மாறிவிட்டது. பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. 23 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று சாதனையை எட்டிவிட்டேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.   ""

என அயன்னா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
நீண்ட நகங்கள் காரணமாக தன்னால் எந்த வேலையையும் தனியாக செய்ய முடியாதுள்ளதாகவும், நகங்களுக்கு பாலிஷ் போடுவதற்கு ஒரு வாரம் எடுக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Read More