Saturday, August 8, 2020

How Lanka

வர்த்தமானி அறிவிப்பின் பின்னர் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு - பொதுஜன பெரமுன

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் பதவியேற்பை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், அதன் பெயர் பட்டியல் நேற்று (07) மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எமது மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

தமது கட்சியின் தேசியப் பட்டியல், பாராளுமன்ற உறுப்பினர் பட்டியல் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கவுள்ளார்.

நாளை காலை 8.30 அளவில் களனி ரஜமஹா விகாரையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read More

Saturday, December 29, 2018

How Lanka

உயர்தரத்தில் சாதனை படைத்த யுத்தத்தால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாவட்ட மாணவிகள் - யாழ் மாணவிகளின் கல்வி நிலை??

உயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) முதல் நிலையினைப் பெற்றுள்ளார்.

இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இணையத்தில் வெளியான பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரம் தற்போது கிடைத்திருக்கின்றன.

அதன்படி, விஞ்ஞானப் பிரிவில் பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை ) முதல் இடத்தையும், வணிகப்பிரிவில் முருகானந்தா கல்லூரி மாணவி ஜனனி, கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி முதல் இடத்தினையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சாதித்த மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இதேவேளை, http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 119 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More
How Lanka

2018 உயர் தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

கிளிநொச்சியில் அமைச்சர் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடன் அளவளாவி சுகாதார சேவைகள் குறித்து மக்களது கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சர் மட்டக் குழுவினர் பின்னர் அம்மக்களுக்காக ஐந்து பார ஊர்திகளில் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்தனர்.

இச்சுற்றுப்பயணத்தின் இறுதியில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி அரச அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அனர்த்த கால சுகாதார சேவைப் பணிகளது மீளாய்வு மற்றும் எதிர்கால இடர்தவிர்ப்பு மற்றும் இடர் முன்னாயத்தம் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் திணைக்கள வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விடயம் தவிர்த்து சுகாதாரத்துறையின் ஆளணிகளை அதிகரிப்பது, புதிய கட்டடங்களை நிர்மாணிப்பது ஆகிய பொதுவான அபிவிருத்தி தொடர்பான விடயங்களே பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்துடன் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழ். குடாநாட்டின் கடற்கரையில் மர்மபொருள் ஒன்று கரையொதுக்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் கரை ஒதுங்கியதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மர்மபொருளினை மீட்டதுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பல் ஒன்றின் உடைந்த பாகமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


எனினும் கரையொதுங்கிய மர்மபொருளினை பார்வையிட பெருந்தொகை மக்கள் கடற்கரையில் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More
How Lanka

மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் படுகாயம் - காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ச ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
Read More

Thursday, December 27, 2018

How Lanka

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக சிக்கலில் சுமந்திரன் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினை உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் இது தொடர்பில் வினவிய போது, இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனுக்கு இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த என்பவரே முதன் முதலில் குறிப்பிட்டிருந்தார்.

புலம்பெயர் தமிழர்களின் அவசியத்திற்கமைய சுமந்திரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதாக கூறப்பட்டது. எனினும் பொதுஜன பெரமுன தாங்கள் கட்சியில் மஹிந்தவுக்கு உறுப்புரிமை வழங்கவில்லை என கூறினால் அந்த பிரச்சினை அத்துடன் நிறைவடைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மூன்று பேர் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுள்ளனர். அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக மஹிந்த அணியினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

தமிழர்கள் சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்களாம்

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வென்றுள்ளனர்” என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,

“தமிழர்கள் தங்கள் ஒற்றுமையின் ஊடாக தெற்கில் உள்ள சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள்.

தமிழர்களின் இந்த ஒற்றுமை தொடர்ந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு நாம் விரைவில் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம்.

எந்தத் தடைகள் வந்தாலும் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை இந்த அரசு அடைந்தே தீரும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Read More
How Lanka

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவி சுமந்திரனுக்கு??

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன், தனது ஆலோசனையின் கீழ், தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்திற்கமைய செயற்பட நேரிடும் என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
Read More
How Lanka

மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் மஹிந்த தரப்பினர் எச்சரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் என மஹிந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறு ஒன்று நடந்தால் ஆட்சி முறையில் எந்த விடயம் குறித்தும் நம்பிக்கை வைக்க முடியாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகியவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன கோபம் அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை என்றால், பாரிய கிளர்ச்சி ஒன்று ஏற்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்.

முழுமையான ஆட்சி முறை குறித்து நம்பிக்கை இழக்கும் போது பொதுவாக கிளர்ச்சி ஒன்றே ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More
How Lanka

பாணந்துறை பிரதேச சபையில் உறுப்பினர்களிடையே கடிபாடு

பாணந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்த வருடாந்த விருந்தில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த இளம் உறுப்பினர் ஒருவர் அதிக குடிபோதையில் அட்டகாசம் செய்துள்ளார்.

அதிக குடிபோதையில் மற்றுமொரு உறுப்பினரின் முதுகு பகுதியை கடித்துள்ளார். இன்னொருவரின் மூக்கை கடித்தமையினால் பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பொது மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு தொடர்புடைய இளம் உறுப்பினர் அளவு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விருந்து பாணந்துரை திக்கல பிரதேச ஹோட்டலில் வார இறுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதிகளவில் மதுபானம் அருந்திவிட்டு தவறாக நடந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More
How Lanka

மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் நிலவி வரும் காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது
Read More

Tuesday, December 25, 2018

How Lanka

யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு பலத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய கால நிலை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை கூறியுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Read More
How Lanka

எதிர்வரும் 27ம் திகதி முதல் பேருந்து பயணக்கட்டணம் குறைப்பு

எதிர்வரும் 27ம் திகதி முதல் பேருந்து பயணக்கட்டணம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், அதிவேக வீதிகளில் பேருந்து பயணக் கட்டணமும் எதிர்வரும் 27ம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, கடவத்தை தொடக்கம் காலி வரை 480 ரூபாவாகவும், மஹரகம தொடக்கம் மாத்தறை வரை 550 ரூபாவாகவும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.புதிய பேருந்து கட்டண விபரங்களை அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்
Read More
How Lanka

தேசிய ஜனநாயக முன்னணியாக பெயர் மாறவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியை, “தேசிய ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு பங்காளிக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் வாரத்தில் இதற்கான நடவடிக்கை இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி இன்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலேயே மேற்படி கூட்டணி தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசிய முன்னணியை, தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.

கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை மறுதினம் இடம்பெறும் கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பின் விபரங்களை உத்தியோக பூர்வமாக அறிவிப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனூடாக நாட்டில் உள்ள அனைத்த கட்சிகளையும் ஒன்றுத்திட்டி ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக செயற்படுவதற்கு எதிர்பார்க்கினறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
Read More
How Lanka

அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை - அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எதுவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

எங்களுக்குள் பேச்சுக்கள் இடம்பெற்றன. அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கூறினார்கள். நாம் அதற்கு இணங்கினோம். இது தொடர்பில் கட்சியின் தலைவர் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அவர்கள் காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து கூறினார்கள். இதற்காக அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க முடியாது.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Read More

Monday, December 17, 2018

How Lanka

மானிப்பாயில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது

யாழில் ஆவா குழுவை சேர்ந்த 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரில் இருவர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் என்பதுடன், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் வானிலும், மோட்டார் சைக்கிளிலும் பயணித்த போது 6 வாள்களு.
கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் 11 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
How Lanka

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது - சுமந்திரன்

இலங்கையில் அரசியலில் பெரும் குழப்ப நிலைகள் ஏற்பட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சமகாலத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதன் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு வருகிறார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து செயற்பட்டமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது.

தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மஹிந்த ஆதரவிலான தரப்பினர் இணையப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், 101 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான குழப்பமான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது. சமகால ஆட்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பமான நிலையில் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நாடாளுமன்ற விழுமியங்கள், சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று, சமகால எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

நாடாளுமன்றில் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில்

நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுப்பட்ட அனைவரும் தற்போது அடையாளளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் காட்சிகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகிய காணொளிகளுக்கமைய குற்ற விசாரணை திணைக்களத்தினால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



அவர்களுக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல், மிளகாய் தூள் தாக்குதல், உச்ச நிலை இடமான நாடாளுமன்றத்தில் சொத்துக்களை சேதப்படுத்தல், பொது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் கருத்தாகியுள்ளது.

எனவே இது தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகள் இல்லை என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 50 நாட்களுக்கும் மேலான காலப்பகுதியில் நாட்டில் அமைதியின்மை நிலை காணப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் சிலவற்றின் போது கடும் மோதல் நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More
How Lanka

புதிய அமைச்சரவைக்காக பட்டியலில் 32 பேரின் பெயர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் இன்றைய தினம் இடம்பெறாதென தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் அமைச்சரவை நியமிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கருதது வெளியிட்டிருந்தனர்.

எனினும் அமைச்சரவை இன்று நியமிக்கப்படாதென ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவைக்காக ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்ட புதிய பெயர் பட்டியல் இன்றைய தினம் ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நேற்று இரவு வரையில் இந்த பட்டியலில் 32 பேரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அரசியலமைப்பிற்கமைய 30 பேர் மாத்திரமே அமைச்சர்களாக நியமிக்க முடியும். அதற்கமைய தீர்மானிக்கப்பட்ட பெயர்கள் இன்றைய தினத்திற்குள் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More