Sunday, December 16, 2018

How Lanka

மனைவிக்காக டோனி செய்த செயல்

டோனி, தற்போது தன் மனைவி சாக்‌ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தனது மனைவிக்காக செய்த செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார்.

அதேபோல் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி, தற்போது தன் மனைவி சாக்‌ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் டோனியின் செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால் நீங்களே அதை சரி செய்கிறீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த டோனியின் ரசிகர்கள், ‘அழகான ஜோடி’, ‘அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது’, ‘நீங்கள் இப்படி செய்யாதீர்கள் மாஹி, பிறகு நாங்களும் செய்ய வேண்டிவரும்’ என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Read More

Friday, October 19, 2018

How Lanka

இலங்கைக்கு விஜயம் செய்க - ராகுல் காந்திக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன் போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்துள்ளார்.

இந்த அழைப்பினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும்போக்குவாதத்தை இல்லாதொழித்தல், எதிர்கால ஆசிய தொடர்பிலும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சந்திப்பு நடத்த உள்ளார்.
Read More

Wednesday, July 4, 2018

How Lanka

டெல்லியில் உள்ள பூங்காவில் ஆவிகளின் நடமாட்டம் - தானாக ஆடும் ஊஞ்சல்

தானாக ஆடும் ஊஞ்சல்
டெல்லியில் உள்ள பூங்காவில் ஆவிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகின்றது.

இந்நிலையில், இன்று குறித்த பூங்காவிற்கு சென்ற பொலிஸார் பூங்காவை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த பூங்காவில் தானாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனை காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
Read More

Sunday, June 3, 2018

How Lanka

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென்னாபிரிக்கா சென்ற போது அவர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார்.

இவர் பயணம் செய்த விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானம், திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி செல்ல ஏற்பாடாகி இருந்தது.அதன்படி திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு, பிற்பகல் 2.08 மணிக்கு விமானம் புறப்பட்டது.


இந்த விமானம் மாலி வான்பரப்பை மாலை 4.44 மணிக்கு கடந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தின் கட்டுப்பாடு மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் மொரீஷியஸ் வான்பரப்பை அடைந்த அந்த விமானத்தால், அந்த நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது ரேடாரின் இணைப்பில் இருந்து விடுபட்டு திடீரென மாயமானது. இதனால் மொரீஷியஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுஷ்மாவின் விமானம் நடுவானில் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே ‘இன்செர்பா’ (நிச்சயமற்ற நிலை) எனப்படும் உஷார் நிலையை பிறப்பித்தனர். பிரச்சினையில் சிக்கும் விமானங்களை மீட்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் முதல் கட்ட உஷார் நிலை இதுவாகும்.

எனினும் 14 நிமிடங்களுக்குப்பின் அதாவது மாலை 4.58 மணிக்கு சுஷ்மாவின் விமானம் மொரீஷியஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. பின்னர் அது மொரீஷியசில் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பின்னரே விமானப்போக்குவரத்து அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுஷ்மாவின் விமானம் சென்ற கடற்பரப்புக்கு மேலான அந்த பாதையில் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. எனவே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இதுபோன்று விமானங்கள் மாயமானால் 30 நிமிடம் வரை காத்திருப்பது வழக்கம். அதன் பின்னரே ‘உஷார்’ நிலை பிறப்பிப்பார்கள்.

ஆனால் இந்த விமானத்தில் சென்றது முக்கிய பிரமுகர் (மந்திரி) என்பதால் 30 நிமிடம் காத்திராமல், உடனே ‘உஷார்’ நிலையை பிறப்பித்திருக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சுஷ்மா சுவராஜ், அங்கிருந்து புறப்பட்டு தென்னாபிரிக்கா போய் சேர்ந்தார். அங்கு அவரை தென் ஆப்பிரிக்க வெளியுறவு துணை மந்திரி லவெல்லின் லாண்டர்ஸ் வரவேற்றார்.

தென்னாபிரிக்காவில் காந்தியடிகளை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தின் 125-வது நினைவையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார்.
Read More

Monday, May 28, 2018

How Lanka

சுப்ரமணியன் சுவாமிக்கு திடீர் சந்தேகம்

அண்மையில் தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பங்கு முக்கியமானது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்த அரசியல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி கேள்வியெழுப்பியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், “99 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் 100வது நாளன்று திடீரென வன்முறை கலவரமாக மாற்றப்பட்டது எப்படி? ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை?

144 பிரிவு மீறலுக்காக பொலிஸார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை? கூட்டம் வன்முறையில் இறங்கியதும் பொலிஸார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர்.

இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி பொலிஸார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை? துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் ஏன் இரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை?

எனக்கு கிடைத்த தகவலின்படி பொலிஸார் மத்தியிலும் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக” சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுப்பிரமணியன் சுவாமி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பகத்தில் பதிவொன்றை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, May 8, 2018

How Lanka

ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திடீர் புதிய தகவல்கள்

ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது' என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர்.

டாக்டர் ஜெயஸ்ரீ கோபால் வாக்குமூலம் அளித்த போது, முன்னுக்கு பின் முரணாக, சில தகவல்களை கூறியுள்ளார்.

பின், டாக்டர்கள் இருவரிடமும், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அதற்கு, அவர்கள் பதில் அளித்தனர்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு, 2016 டிச., 4 மாலை, மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னரும், அவருக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், டாக்டர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

டாக்டர் ராமச்சந்திரன் வாக்குமூலம், பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க, 2016 மே மாதம், டாக்டர் ராமச்சந்திரன், சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதே, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு, மிகவும் அதிகமாக இருந்துள்ளது.

அதைக் கண்ட ராமச்சந்திரன், 'உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. புதிதாக வந்துள்ள, 'இன்சுலின்' மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்' என, பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதற்கு பின், அவர் அழைக்கப்படவில்லை.

இதற்கிடையில், அவரை சசிகலா உறவு டாக்டர் சிவகுமார் தொடர்பு கொண்டு, சில மருந்துகளை, ஜெயலலிதாவுக்கு கொடுக்கலாமா என, கருத்து கேட்டுள்ளார். அதன் பிறகே, தான் பரிந்துரைத்த மருந்துகளை, ஜெயலலிதா எடுத்துக் கொள்ளவில்லை என்பதை, டாக்டர் ராமச்சந்திரன் அறிந்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு, 2016 செப்., 22ல் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 'சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு' என, டாக்டர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம், '2016 மே மாதத்திலேயே, ஜெயலலிதா, உடல்நிலை மோசமாக இருந்தது என்றால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையா...' என, கமிஷன் விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர், 'சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேளுங்கள்' என, பதில் கூறியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, அவர் பரிந்துரைத்த மருந்தை, ஜெயலலிதா உட்கொண்டாரா, இல்லையா; அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய பிறகும், ஏன் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.

நேற்றைய விசாரணை குறித்து, சசிகலா வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறியதாவது:

அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை மற்றும் தைராய்டு நோய் தொடர்பாக, 2015 முதல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகும், அவர் தினமும் ஜெயலலிதாவை பார்த்து, சிகிச்சை அளித்துள்ளார். சசிகலா, தன் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டபடி, 2016 டிச., 3, 4ம் தேதி, ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.

அப்போது, எய்ம்ஸ் மருத்துவர்கள், 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளிக்கும்படி கூறியதை தெரிவித்துள்ளார்.அதற்கு, ஜெயலலிதா இசைவு தெரிவித்து, தலை அசைத்துள்ளார்.

டிச., 4 காலை, 11:00 மணிக்கு, அவரை சந்தித்த போது, அவர் நன்றாக இருந்ததாகவும், சர்க்கரை அளவு ஏற்றம், இறக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று, டாக்டர் சாந்தாராமிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
Read More

Thursday, May 3, 2018

How Lanka

இந்தியாவில் மணல் புயல்: 100ற்கு மேல் உயிரிழப்புக்கள்

வட மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட மணல் புயலில் சிக்குண்டு, இதுவரையில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்காண்ட் ஆகிய மாநிலங்களையே குறித்த புயல் அதிகளவில் தாக்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த மக்களே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் ராஜஸ்தானில் மட்டும் 47பேரும், உத்தரப் பிரதேசத்தில் 46பேரும், ஜார்காண்ட் மாநிலத்தில் 2பேருமென, மொத்தம் 100பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர்கள் மூச்சுதிணறல் மற்றும் மின்னல் தாக்குதல் உட்பட, மரங்கள் முறிந்து வீழ்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

Friday, April 27, 2018

How Lanka

ஜெயலலிதாவின் வாரிசு - அம்ருதாவை ஏமாற்ற முனையும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்

ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையால் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலைத் தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரும் இந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாளைக்குள் அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று அறிக்கை தாக்கல் செய்தது. அப்போலோ மருத்துவமனை சார்பில் அதன் சட்டப்பிரிவு மேலாளர் மோகன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அவரது அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்.22 முதல் டிசெ.5 வரை 75 நாள்கள் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இதய நோய் சுவாச சிகிச்சை, கிருமி தொற்று நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை வழங்கினர்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து உணவு துறை பிசியோதரபி நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்.

அவர் இறந்த பிறகு டிசெம்பர் 7-ம் தேதி மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உயிரி மாதிரிகள் அனைத்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதே பயன்படுத்தப்பட்டு விட்டன.

மேலும் இரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகளை ஒராண்டுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. தற்போது அப்போலோவிடம் ஜெயலலிதாவின் உயிரி மாதிரி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக் கோரும் அம்ருதாவின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Read More

Tuesday, April 24, 2018

How Lanka

தமிழரான சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் இந்திய ரூபா 2,508 கோடி பெறுமதியான பங்குகளை வழங்கியுள்ளது

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பங்குளின் இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபாவாகும்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடமையாற்றி வரும் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் ஆவார்.

இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் இவருக்கு 2014ம் ஆண்டு ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது.

கூகுள் நிறுவன விதிமுறைப்படி அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.

சுந்தர் பிச்சைக்கு பங்குகள் வழங்கப்பட்டு நாளை 25ம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அந்த பங்குகள் மீதான முழு உரிமையும் சுந்தர் பிச்சை பெற்றுக்கொள்வதனால் இனி அவர் அந்த பங்குகளை விற்க முடியும்.

2014ம் ஆண்டு வழங்கப்பட்ட பங்குகளின் தற்போதைய இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபா ஆகும். சமீப காலங்களில் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகின்றது.

2015 மற்றும் 2016ம் ஆண்டிலும் சுந்தர் பிச்சைக்கு பல பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டிற்கான பங்கு மதிப்புகளை கூகுள் நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை.
Read More

Friday, April 13, 2018

How Lanka

விதிமுறைகளை மீறிய இந்திய வீரர்கள் இருவர் வௌியேற்றம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரில் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகி, நடைபெற்று வருகின்றன.

இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 218 வீர, வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்கள் Gold Coast விளையாட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்ஃபான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக பொதுநலவாய போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பொதுநலவாய போட்டியில் No-needle Policy விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் எழுவது இது இரண்டாவது முறையாகும்.

பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப நாளின் போது, இந்திய குத்துச்சண்டை அணியின் மருத்துவர், பயன்படுத்தப்பட்ட ஊசிகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை என கண்டனத்திற்குள்ளானார்.
Read More

Tuesday, April 10, 2018

How Lanka

தமிழகத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் கைது

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது.

எனினும், போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை சுற்றி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்துக்குள் சிலர் செருப்பை வீசியுள்ளனர். இதனையடுத்து சற்று நேரத்திற்கு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
 செருப்பை வீசியவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போராட்டத்திர் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா, கருணாஸ், வா. கௌதமன், தங்கர்பச்சான், மணியரசன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read More

Thursday, April 5, 2018

How Lanka

கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் வாரியம் - விளம்பரங்களுக்காக பணத்தை அள்ளி இறைக்கும் நிறுவனங்கள்

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளுக்கு  ரசிகர்கள் அதிகம் என்பதால். தங்களுடைய விளம்பரங்களை போட்டி போட்டுக் கொண்டு நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.

போட்டிகளின் இடைவேளைகளில் காட்டப்படும் 1 நிமிட விளம்பரத்துக்கு கூட குறைந்தது 1 கோடி ரூபா வரை சில நிறுவனங்கள் செலுத்துகின்றன.

இவ்வாறு இவளவு பணம் செலவழித்து காட்டப்படும் உற்பத்தி பொருட்களின் தரம் எவளவு மோசமாக இருக்கும் என்பதை  நாம் ஜோசிப்பது இல்லை.

இது ஒரு புறம் இருக்கட்டும்........

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6138.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஏலம் மூலம் நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது.

தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்புகிறது.

ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிவடையவுள்ளது.

இதனையடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகள் 2018 - 2023 வரையிலான காலகட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தை பிசிசிஐ நடத்தியது.

இதற்கான ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிசிசிஐ அழைப்புவிடுத்தது.

இதன் அடிப்படையில் ஏப்.3 ஆம் திகதி மும்பையில் இதற்கான ஏலத்தை பிசிசிஐ நடத்தியது. அடிப்படை தொகையாக ரூ.4176 கோடியை பிசிசிஐ நிர்ணயித்தது.

இதன்பின்னர் நிறுவனங்கள் தங்கள் ஏலத்தொகையை அறிவித்தன. முதல் நாள் முடிவில் ரூ.4442 கோடியில் ஏலம் நின்றது.

இரண்டாம் நாள் முடிவில் ரூ.5748 கோடியில் ஏலம் நின்றது. இன்று மூன்றாவது நாளாக நடைப்பெற்ற ஏலத்தில் இறுதியாக ரூ.6138.10 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது.
இந்தத் தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இந்தமுறை ஏலத்தை வெளிப்படையாக ஆன்லைன் மூலம் நடத்தியுள்ளது.

ஏலம் இந்தளவு உச்சத்தை தொட்டது இதுவே முதன்முறை. இதன்மூலம் ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒரு போட்டியை ஒளிபரப்ப ரூ 60.1கோடி கொடுத்துள்ளது.

2018 -2023 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி 102 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ளது.

ஸ்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2012ல் ரூ.3851 கோடி ஏலம் எடுத்ததிருந்தது. அப்போது ஒரு போட்டிக்கு 43கோடி கொடுத்தது. மொத்தம் 98 போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More

Monday, April 2, 2018

How Lanka

இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷன் விருது

இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனிக்கு டெல்லியில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுகின்றன.


இரண்டாம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட விழாவில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனி உள்ளிட்ட முக்கிய நபா்கள் விருதுகளை பெற்றனா். 3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டாம் கட்டமாக 42 போ் இன்று பத்ம விருதுகளை பெற்றனா். டோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இதை பெறுவதற்கு முன் டோனி இராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்து விருதினை பெற்றுக் கொண்டார். டோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவதால், சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டோனி விருது பெறும் வீடியோவைப் போட்டு விசில் போடு என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்துள்ளது. மேலும் சமூகவலைத்தலங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Read More

Friday, March 30, 2018

How Lanka

உறவுகளால் மன உளைச்சல் - சிறைக்கு செல்ல ஆசைப்படும் சசிகலா

கணவர் நடராஜன் இறுதிக்கிரியைக்காக, 15 நாள் பரோலில் வந்த சசிகலா, குடும்பத்தினர் கொடுக்கும் குடைச்சலால், கடும் மன உளைச்சலில் தவித்து வருகிறார்.

'வீட்டை விட சிறையே நிம்மதி' என கருதி, இன்றே பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல் நலக் குறைவால், 20ம் தேதி இறந்தார். பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் தஞ்சைக்கு வந்தார்.

பரிசுத்தம் நகரில், நடராஜனுக்கு சொந்தமான வீட்டில், 10 நாட்களாக தங்கி இருக்கிறார். 'நடராஜனின் சொத்துக்களை முறையாக பிரித்து தர வேண்டும்' என, அவரது உறவினர்கள், சசிகலாவிடம் கேட்டுள்ளனர்.

சசிகலா உறவினர்கள், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, தங்களுக்கு தான் சொத்து வேண்டும் என,கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், தினகரனுக்கும், திவாகரனுக்குமான மோதலை, நடராஜன் இருக்கும் வரை, தீர்த்து வைத்தார். தற்போது, சசிகலாவும் சரி செய்ய போராடி தோற்று விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு பக்கம் தினகரன், விவேக் மோதலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படி குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட சசிகலா, கடும் மன உளைச்சலில் தவித்து வருகிறார்.

இதனால், வீட்டில் இருப்பதை விட, சிறையில் நிம்மதியாக இருந்ததாக உறவினர் களிடம் புலம்பியுள்ளார். மேலும், தினகரன், சசிகலாவை தன் ஆதரவாளர்கள் கூட நெருங்க விடாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதனால், தினகரன் மீதும் சசிகலா கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

தஞ்சையில் நடராஜனுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், அவரது பட திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில் சசிகலா கலந்து கொள்வார் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். மன உளைச்சல் காரணமாகவே, அந்த நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் பரோல், ஏப்., 3ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கே அவர் கார் மூலம், பெங்களூரு செல்ல இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.
Read More

Wednesday, March 28, 2018

How Lanka

62 கிழட்டு வயதிலும் விஜய் மல்லையாவின் காம கூத்தாட்டம்

இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற, சாராய வியாபாரியும், 'கிங் பிஷர்' விமான நிறுவன முன்னாள் உரிமையாளருமான, விஜய் மல்லையா, 62, மூன்றாவதாக, இளம் பெண் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்லையாவின் முதல் மனைவி, சமீரா தைபேஜி. விமானப் பணிப்பெண்ணான இவரை திருமணம் செய்த ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், 1987ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் உள்ளார்.

அதன் பின், 1993ல், நண்பரின் மனைவியான, பெங்களூரைச் சேர்ந்த ரேகாவை, இரண்டாவதாக திருமணம் செய்தார்; இவர்களுக்கு லீனா மற்றும் தான்யா என, இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி ரேகாவிடம் இருந்து, விவாகரத்து பெறாத நிலையில், மூன்றாவதாக, தன் விமான நிறுவனத்தில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய, பிங்கி லால்வானி என்ற இளம் பெண்ணை, மல்லையா திருமணம் செய்ய உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த மல்லையா, பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற போது, அவருடன், பிங்கியும் சென்றார். இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

லண்டன் நீதிமன்றத்தில் நடந்த, 'கிங் பிஷர்' விமான நிறுவன வழக்கு விசாரணையின் போதும், மல்லையாவுடன், பிங்கியும் வந்திருந்தார்.

தனக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் உடன் இருந்த பிங்கியை, மல்லையா, மூன்றாவதாக திருமணம் செய்ய இருப்பதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More
How Lanka

ஜெயலலிதாவுக்கு திடீரென ஆபரேஷன் நடைபெற்றது - ராமமோகன ராவ்

இந்தியாவின் இரும்பு மனுஷி என்று பல மாநில தலைவர்களால் புகழப்பட்ட ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நாட்களில், அவர் எப்படித்தான் இருக்கிறார்? என்று தெரிந்து கொள்வதில் அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் துடியாய் இருந்தனர். ஆனால் பல நாட்கள் பதில் கிடைக்கவில்லை, பின் ‘அம்மா இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார்’ என்று அமைச்சர்கள் அளந்துவிட்ட பதில்கள் கிடைத்தன.

ஜெயலலிதா இறந்து, கட்சி துண்டாடப்பட்ட பின் திண்டுக்கல் சீனிவாசனே ‘அப்பல்லோவுல அம்மாவ நாங்க யாருமே பார்க்கலை. இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்னு பொய் சொன்னோம்.’ என்று ஓப்பன் மீட்டிங்கில் தெரிவித்தார்.

ஆனால் ஜெ., மரணம் குறித்து அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷனில் பதிலளித்து வரும் சில முக்கியஸ்தர்கள் ‘அம்மாவை நாங்கள் இத்தனை முறை பார்த்தோம், இந்த இந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்.’ என்று போட்டுடைக்கிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் தமிழக தலைமை செயலாளரான ராமமோகன ராவ், கமிஷனில் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் சிலவற்றை அள்ளிக் கொட்டியிருக்கிறார் இப்படி…

“அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலேயே அவசர ஆபரேஷன் நடைபெற்றது. அவசரமாக அவரது நெஞ்சு பகுதியை உடைத்து, இதயத்தில் கருவிகளைப் பொருத்தினர்.

அதனால், ஏராளமான ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது அவர் உடலிலிருந்து. இதைப் பார்த்ததும் பதறிவிட்டேன். அங்கிருந்த டாக்டர்களிடம், ‘அறையில் வைத்து ஏன் ஆபரேஷன் செய்கிறீர்கள்? ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லவில்லையா?’ என்று கேட்டேன். அந்த நேரத்தில் அந்த அறையில் சசிகலா இல்லை.

எய்ம்ஸ் மருத்துவர்கள், எக்மோ கருவியை ஜெயலலிதாவுக்கு பொருத்தி, இருபத்து நான்கு மணி நேரம் அதன் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்! என சொல்லினர். ஆனால் அந்த மணி நேரங்கள் கடந்தும் இதயத்தின் செயல்பாட்டில் முன்னேற்றமில்லை. எனவே அந்த கருவியை அகற்றினர். எக்மோ கருவி அகற்றப்பட்ட போது மருத்துவமனையில் வெங்கய்ய நாயுடு இருந்தார்.” என்றும் ராவ் சொல்லியிருக்கிறார்.

ராவ் கூறியிருக்கும் விஷயங்களான திடீர் மாரடைப்பு, எக்மோ கருவி ட்ரீட்மெண்ட் ஆகியன ஷீலா பாலகிருஷ்ணன் அளித்திருக்கும் வாக்குமூலத்திலும் இருப்பது க்ராஸ் செக் செய்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்து சுமார் ஒன்றேகால் ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது மரண மர்மங்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
Read More

Wednesday, March 21, 2018

How Lanka

தினேஷ் கார்த்திக்கை பாராட்டமல் இருந்த முரளி விஜய் - முன்னாள் மனைவி விவகாரம் காரணம்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது வெற்றி தேடித் தந்த தினேஷ் கார்த்திக்கை, சக வீரர் முரளி பாராட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவை என்ற போது, சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

இதனால் அவரை மற்ற வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர், மருத்துவர், செயலாளர் என்று அனைவரும் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி என்று பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் மட்டும் பாராட்டு தெரிவிக்காதது வருத்தமளிக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் மனைவி நிகிதாவை முரளி விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக முரளி விஜய், தினேஷ் கார்த்திக்கை பாராட்டாதது வறுத்தமளிப்பதாக உள்ளது எனவும் உலகமே பாராட்டி வரும் ஒரு வீரரை தனிப்பட்ட விரோதத்திற்காக பாராட்ட மனமில்லாத முரள் விஜய்க்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

முரளிவிஜயும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Monday, March 19, 2018

How Lanka

இணையத்தில் வைரலாகும் சினேகாவின் Workout வீடியோ

தென்னிந்திய திரைப்பட நடிகையான சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். "இங்கனே ஒரு நீல பாக்ஷி" என்ற மலையாள பட மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2001-ம் ஆண்டு "என்னவளே" என்ற படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது, அவருடன் நடித்த நடிகர் பிரசன்னா-வை காதலித்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு "பிரசன்னா விகான்" என்ற ஒரு மகன் இருக்கிறான். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமா நடித்து வருகிறார். சமீபத்தில் "வேலைக்காரன்" படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா வாய்ப்புகள் தேடி வருவதால், தந்து உடம்பை ஃபிட்டாகவும், அழகாவும் வைத்துகொள்ள ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் நடிகர் "பிரசன்னா" உதவி செய்து வருகிறார். நடிகர் சினேகா ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது
Read More
How Lanka

ஸ்ரீதேவி மகள்கள் மீது திடீர் பாசம் காட்டும் அர்ஜுன் கபூர்

போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜீன் கபூர் ஸ்ரீதேவி மகன்கள் மீது திடீர் பாசம் காட்டுவது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜீன் கபூர் நடிகை ஸ்ரீதேவி தங்கள் தந்தையை பிரித்து அழைத்துச் சென்றதால் அவருடன் பேசியதே இல்லை.

மேலும் தந்தையிடமும் அர்ஜுன் பேசாமல் இருந்தார். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். தந்தையுடன் பேசத் துவங்கியதுடன் ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி கபூர் மீதும் பாசமாக உள்ளார்.

“நமஸ்தே இங்கிலாந்து” படப்பிடிப்புக்காக பஞ்சாப் சென்றிருந்த அர்ஜுன் மும்பை திரும்பினார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் போனி கபூர், குஷி, ஜான்வி ஆகியோருக்கு விருந்து கொடுத்தார்.

அந்த விருந்து நிகழ்ச்சியில் அண்மையில் துபாயில் திருமணம் செய்து கொண்ட நடிகர் மோஹித் மர்வா தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

அர்ஜுன் தனது தந்தை, ஜான்வி, குஷிக்கு ஆறுதலாக இருப்பதை பார்த்து பாலிவுட்காரர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்
Read More
How Lanka

ஜெயலலிதாவின் எதிரியும் சசிகலாவின் கணவனுமாகிய நடராஜன் மரணம்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராஜன் இன்று சென்னையில் காலமானார்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சசிகலாவின் கணவரான நடராஜன் (74) கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, அவ்வப்போது உடல்நலம் குன்றி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார்

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதால் அவர் உடல்நலம் தேறி வந்தார்.


இதன் காரணமாக அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் வந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மீண்டும் உலநலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடராஜனுகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பெங்களூரு சிறையில் உள்ள அவர் மனைவி சசிகலா கணவரை காண பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து எம்பாமிங் செய்ய ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவர் இறந்துள்ள நிலையில் சசிகலா சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு நடராஜன் காலமானதைத் தொடர்ந்து எம்பாமிங் செய்யப்பட்டு, அதன் பின் பொதுமக்களுக்காக அஞ்சலிக்கு வைக்கப்பட்டுவிட்டு, அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கணவனை பார்க்க வேண்டும் என்று கூறி பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கேட்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவர் பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கேட்கவுள்ளதாகவும், காலை 8.30மணிக்கு சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து வழங்கப்படும், பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என கூறப்படுகிறது.

15 நாட்கள் பரோல் கேட்டுள்ள நிலையில், அவருக்கு எத்தனை பரோல் வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சற்று முன் எம்பார்மிங் செய்யப்பட்ட அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏரளாமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Read More