Monday, April 2, 2018

How Lanka

இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷன் விருது

இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனிக்கு டெல்லியில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுகின்றன.


இரண்டாம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட விழாவில் இந்திய அணி வீரர் மகேந்திர சிங் டோனி உள்ளிட்ட முக்கிய நபா்கள் விருதுகளை பெற்றனா். 3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டாம் கட்டமாக 42 போ் இன்று பத்ம விருதுகளை பெற்றனா். டோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

இதை பெறுவதற்கு முன் டோனி இராணுவ உடையில் கம்பீரமாக நடந்து வந்து விருதினை பெற்றுக் கொண்டார். டோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவதால், சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டோனி விருது பெறும் வீடியோவைப் போட்டு விசில் போடு என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்துள்ளது. மேலும் சமூகவலைத்தலங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.