Thursday, May 3, 2018

How Lanka

இந்தியாவில் மணல் புயல்: 100ற்கு மேல் உயிரிழப்புக்கள்

வட மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட மணல் புயலில் சிக்குண்டு, இதுவரையில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்காண்ட் ஆகிய மாநிலங்களையே குறித்த புயல் அதிகளவில் தாக்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த மக்களே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் ராஜஸ்தானில் மட்டும் 47பேரும், உத்தரப் பிரதேசத்தில் 46பேரும், ஜார்காண்ட் மாநிலத்தில் 2பேருமென, மொத்தம் 100பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவர்கள் மூச்சுதிணறல் மற்றும் மின்னல் தாக்குதல் உட்பட, மரங்கள் முறிந்து வீழ்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.