Wednesday, October 4, 2017

How Lanka

பிரேசிலில் பொலிஸாரின் கைப்பேசியில் சிக்கிய நிஜ வேற்றுகிரகவாசி


உலகின் முதல் நிஜ வேற்றுக்கிரகவாசி என பிரேசில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரேசில் பொலிசார் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை வேற்றுக்கிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

பிரேசிலின் பெர்குமெட்டர் பகுதியில் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பொலிசார் நள்ளிரவில் குறித்த உருவத்தைக் கண்டு, தங்களது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமெடுத்துள்ளனர்.

ஆனால், குறித்த புகைப்படம் புகழ்பெற்ற திரைப்படக்காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட புகைப்படம் எனவும் சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வேற்றுக்கிரக உருவத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளன. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அச்சம் காரணமாக அந்த உருவத்தை நெருங்காமல் அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர்.

மேலும், அந்த உருவம் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.