கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்கள் பூர்த்தியடைகின்றது.
1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை ரயில் நிலையம் 1 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நடைமேடைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது 13 நடைமேடைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு நாளாந்தம் சுமார் 13 இலட்சம் பயணிகள் வருகை தருவதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.