Wednesday, October 4, 2017

How Lanka

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.