இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்காக வீசா விண்ணப்பிப்போர் 3 நாட்களில் சுற்றுலா வீசாவை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் இதை தெரிவித்துள்ளார்.
பிரெஞ் வசந்த காலத்தின் 7 ஆவது நிகழ்வு (French Spring Festival) ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜீன் மரின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா வீசா விண்ணப்பிப்போர் 3 நாட்களில் வீசாவினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் பின்னரான காலத்தில் பிரான்ஸில் இருந்து 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு வந்தனர்.
மேலும், போர் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் இருந்து 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 10 ஆயிரம் இலங்கை சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.