Monday, December 11, 2017

How Lanka

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிடுவதில் மக்கள் அதிக நாட்டம்


தமிழகம் - கோயம்புத்தூரில் பொலிஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கும் பெருமளவான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், குறித்த அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிடுவதில் அதிக நாட்டம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

99 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தானிய காலத்து கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது.


இதில், பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள். கடற்படையினர் பயன்படுத்திய கப்பல்கள், ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிடுவதில் அதிக நாட்டம் செலுத்துவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.