Wednesday, March 7, 2018

How Lanka

மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக சிலர் காயமடைந்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் இனவாத மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மாத்தளை வரை அது தீவிரமடைந்துள்ளது.

அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.