Saturday, December 29, 2018

How Lanka

உயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடம்

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில் 3A சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரியில் 1ஆம் இடத்தையும், யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, அகில இலங்கையில் 77ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கும் மிதுர்சனிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


மேலும், http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
Read More
How Lanka

2018 உயர் தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

கிளிநொச்சியில் அமைச்சர் ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடன் அளவளாவி சுகாதார சேவைகள் குறித்து மக்களது கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சர் மட்டக் குழுவினர் பின்னர் அம்மக்களுக்காக ஐந்து பார ஊர்திகளில் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்தனர்.

இச்சுற்றுப்பயணத்தின் இறுதியில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி அரச அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அனர்த்த கால சுகாதார சேவைப் பணிகளது மீளாய்வு மற்றும் எதிர்கால இடர்தவிர்ப்பு மற்றும் இடர் முன்னாயத்தம் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் திணைக்கள வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விடயம் தவிர்த்து சுகாதாரத்துறையின் ஆளணிகளை அதிகரிப்பது, புதிய கட்டடங்களை நிர்மாணிப்பது ஆகிய பொதுவான அபிவிருத்தி தொடர்பான விடயங்களே பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்துடன் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More
How Lanka

வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்

யாழ். குடாநாட்டின் கடற்கரையில் மர்மபொருள் ஒன்று கரையொதுக்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாராட்சி கிழக்கு ஆளியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் கரை ஒதுங்கியதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மர்மபொருளினை மீட்டதுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கப்பல் ஒன்றின் உடைந்த பாகமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


எனினும் கரையொதுங்கிய மர்மபொருளினை பார்வையிட பெருந்தொகை மக்கள் கடற்கரையில் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Read More
How Lanka

மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் படுகாயம் - காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம் மற்றும் தலைப்பகுயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய அவரது முகம் இரும்பு தகடுகள் பயன்படுத்தி மீளவும் சரி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மீளவும் யோஷித ராஜபக்ச ரகர் விளையாட முடியாதென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய பின்னரே சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
Read More

Thursday, December 27, 2018

How Lanka

பும்ராவின் வேகத்தில் பலோ ஓன் ஆனது அவுஸ்ரேலிய அணி

மெல்போர்ன் டெஸ்டில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சினால் அவுஸ்திரேலியா அணி 151 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக புஜாரா 106 ஓட்டங்களும், கோஹ்லி 82 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி நேற்று ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று அவுஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது. பின்ச்சை 8 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவும், ஹாரிஸை 22 ஓட்டங்களில் பும்ராவும் வெளியேற்றினர்.

அதன் பின்னர் வந்த கவாஜா(21), ஷான் மார்ஷ்(19), ஹெட்(20) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னர் வந்த டிம் பெய்ன் 22 ஓட்டங்களில் அவுட் ஆக ஏனைய விக்கெட்டுகளும் மள மளவென சரிந்தன.

கடைசி இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய பும்ரா 15.5 ஓவர்களில் 33 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 4 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. விஹாரி 13 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Read More
How Lanka

வரும் திங்கள் அன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

இவ்வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படமாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதியை விரைவில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் பெரும்பாலும் இந்த மாத இறுதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Read More