மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று அவசரமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏஐ191 பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2.25 மணியளவில் மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் திடீரென அலற ஆரம்பித்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கஜகஸ்தான் நாட்டில் இன்று காலை 8 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் தீ எச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்ததற்கான காரணத்தை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.